உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி மாவட்டத்தில் மீண்டும் மழை

Published On 2023-05-28 12:13 IST   |   Update On 2023-05-28 12:13:00 IST
  • தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளில் நீர் வர தொடங்கி உள்ளது.
  • கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு இம்முறை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்றே அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று பெய்த சாரல் மழை காரணமாக உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி காணப்பட்டது.

அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக தேனி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு இம்முறை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளில் நீர் வர தொடங்கி உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.20 அடியாக உள்ளது. அணைக்கு வருகின்ற 50 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. இருப்பு 2303 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 52.76 அடியாக உள்ளது. அணைக்கு 56 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2375 மி.கன அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்தும் திறப்பு இல்லை. இருப்பு 207.32 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.40 அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 47.44 மி.கன அடியாக உள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக பெரியாறு 3.2, தேக்கடி 0.6, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 8.6, சண்முகாநதி அணை 11.6, வைகை அணை 20.6, ஆண்டிபட்டி 30.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News