உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

பாண்டமங்கலத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம்

Published On 2022-09-30 14:53 IST   |   Update On 2022-09-30 14:53:00 IST
  • பாண்டமங்கலத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
  • முகாமில் 70-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் கால்நடை மருந்தகத்தில் உலக வெறிநோய் தினத்தினை முன்னிட்டு நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்களுக்கான இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருச்செங்கோடு கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மருத்துவர் அருண்பாலாஜி தலைமையில் நடைபெற்ற முகாமை கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் கலந்துகொண்டு தொடங்கி வைத்து, தடுப்பூசி போடப்பட்டதற்கான செல்லப்பிராணிகள் நல அட்டைகளை வழங்கினார்.

முகாமில் 70-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் அனைத்து நாய்களுக்கும் குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கப்பட்டன.

இதில் பாண்டமங்கலம் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் தனவேல், மருத்துவர் தரணிதரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுரேஷ், தடுப்பூசி பணியாளர் சுந்தரமூர்த்தி, உதவியாளர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News