இந்து கோவிலுக்கு நிழற்குடை அமைத்த இஸ்லாமிய ஊராட்சி மன்ற தலைவர்
- நிழற்குடை அமைத்து தர திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் கோரிக்கை வைத்தனர்.
- சொந்த நிதியில் தன் குடும்பத்தின் சார்பாக ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சிக்குட்பட்ட ஓலைக்குடிப்பட்டி பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் முருகன் கோவில் உள்ளது.மழை,வெயில், காலங்களில் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய நிழற்குடை அமைத்து தர திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த நிதியில் தன் குடும்பத்தின் சார்பாக ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் முருகன் கோவிலின் முன் பகுதியில் மழை வெயில் காலங்களில் எந்த சிரமமுமின்றி இருக்க பக்தர்களின் நலன் கருதி மேற்கூரை அமைத்தார்திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர். இந்நிகழ்வு இந்து, முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதாக அமைந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரை அனைத்து தரப்பு மக்களும் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தி மக்களின் பாராட்டுகளை பெற்றிருப்பவர் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர். இதற்காக பல விருதுகள் அவரை தேடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.