உள்ளூர் செய்திகள்

ஊஞ்சல் உற்சவ விழா

Published On 2023-10-26 12:00 IST   |   Update On 2023-10-26 12:00:00 IST
  • கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில்ஊஞ்சல் உற்சவ விழா
  • விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர்.

பொன்னமராவதி, 

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் 51-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்றது. முதல் நாள் அம்மன் இராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 2ம் நாள் மீனாட்சி அலங்காரத்திலும், 3ம் நாள் சிவலிங்க பூஜை அலங்காரத்திலும் என அம்மனுக்கு தினம்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழாவையொட்டி நாள்தோறும் பக்தி இன்னிசை கச்சேரி நடை பெற்றது. விஜயதசமி நாளை யொட்டி அம்பு போடுதல் நிகழ்வு நடை பெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று புதன்கிழமை ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அபிஷேக, அலங்காரத்திற்குப்பின் அம்மன் மலர்களா லும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி காட்சியளித்தார். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா வையொட்டி நாதஸ்வர கச்சேரி நடை பெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News