உள்ளூர் செய்திகள்

இலவச சிறுநீரக மருத்துவ முகாம்

Published On 2023-10-15 12:25 IST   |   Update On 2023-10-15 12:25:00 IST
  • புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில்இலவச சிறுநீரக மருத்துவ முகாம்
  • அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்தார்.

புதுக்கோட்டை, 

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் டீம் மருத்துவமனை மற்றும் ஆலிவ் யூராலஜி கிளினிக் இணைந்து நடத்திய இலவச சிறுநீரக மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.எச். சலீம் அனைவரையும் வரவேற்றார். முகாமில் குடல், இரைப்பை மற்றும் கல்லீரல் நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் வெங்கட்ராமன்,டீம் மருத்துவமனையின் இருக்கை மருத்துவர்கள் பிரியங்கா மற்றும் நிலோபர், சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்அகமது மர்ஜீக் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள், எரிச்சலுடன் சிறுநீர் போகுதல், இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல், நீர் கடுப்பு, நீர் அடைப்பு, தாங்க இயலாத இடுப்பு, வயிறு மற்றும் முதுகுவலி, இரவில் அடிக்கடி நீறுநீர் போகுதல், தடைபட்டு சிறுநீர் வெளியேறுதல், அவசரமாகசிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, மந்தமாக சிறுநீர் போகுதல், சிறுநீர் கழித்த பின்னும் நீர்ப்பை நிரம்பியது போன்ற உணர்வு, விரை வீக்கம், ஆண் மலட்டு தன்மை, படுக்கையில் சிறுநீர் கழித்தல், சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள், சிறுநீர் பாதையில் அடைப்பு, சிறுநீரகம் மற்றும் சிறுநீரக பாதையில் பிறவி கோளாறு உள்ளவர்கள், சிறுநீரக பாதையில் ஏற்படும் புற்றுநோய்க்கான ஆலோசனை மற்றும் பெண்களுக்கு நீர்ப்பை இறக்கம் நீர் கசிவு போன்றவற்றுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினார். மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் சிறுநீர் வராமல் சதை அடைப்பு போன்ற நோய்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் டீம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்தார்.

இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர் கனகா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் டீம் மருத்துவமனையின் உணவியல் நிபுணர் மகாலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News