அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம்
விராலிமலை,
மத்திய அரசின் நிதி உதவியால் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இலுப்பூர் பேரூராட்சியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது, இதில் நீண்ட நாட்களாக வீடு கட்டி முடித்தும் பேரூராட்சி வழங்க வேண்டிய தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படாமல் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அனுமதியே வாங்காமல் ஏற்கனவே கட்டிமுடித்த வீடுகளுக்கு முறைகேடாக பணம் ஏற்றியுள்ளதாகவும். உண்மை பயனாளிகளை அலைக்கழித்தும், வஞ்சித்தும், ஒருதலை பட்சமாக பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உண்மை பயனாளிகளுக்கு உடனடியாக பணத்தை விடுவிக்க கோரியும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் லட்சுமணன் தலைமையில் ஆலம்கான், பொன்மலர் முருகேசன், சரவணன், சியாமளா, ராமாயி சின்னையா உள்ளிட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனால் பேரூராட்சி அலுவலக வளாகப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதை அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷா ராணி மற்றும் பொறியாளர் பணிக்கு வராததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.