உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டம்

Published On 2023-07-22 13:47 IST   |   Update On 2023-07-22 13:47:00 IST
  • கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
  • சாலை வசதி, பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்

கந்தர்வகோட்டை, 

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது.ஒன்றியக் குழு துணை தலைவர் செந்தாமரை குமார், ஆணையர்கள் பால் பிரான்சிஸ், திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கந்தர்வகோ ட்டை பேருந்து நிலையத்தில் சுகாதார கழிப்பிட வசதி, கெண்டை யன் பட்டியில் அங்கன்வாடி மையம், கல்லா க்கோட்டை ஊராட்சியி ல் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.நிறைவாக ஒன்றிய குழு தலைவர் பேசும் பொழுது நிதி நிலைமைக்கு ஏற்ப கோரிக்கைகள் நிறைவேற்ற ப்படும் என்றார்.கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன் பாண்டியன், திருப்பதி, முருகேசன், கோவிந்தராஜ், பாரதி பிரியா, சுதா, மலர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News