- கலப்பு திருமணம் செய்து 3 மாதத்திலேயே இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்
- தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரியில் ரேடியோலாஜி பிரிவில் தற்காலிகமாக பணியாற்றி வருபவர்கள் தேனி மாவட்டம், உத்தம பாளையம் , கம்பத்தை சேர்ந்தவர் சங்கீதா(வயது 45) இவரது மகள் லமிகா(வயது 23). இவரும், மணப்பாறையை சேர்ந்த வடிவேல் என்பவரும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கலப்பு திருமணம் செய்து கொண்டனர் . புதுக்கோட்டையில் மேல நான்காம் வீதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் அறையில் சீலிங் பேன் ஊக்கில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடக்கிறார். இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் போpல் கணேஷ்நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்கு பதிவு செய்து திருமணம் ஆகி மூன்றே மாதம் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார். லமிகா அத்தை சில மாதங்களுக்கு முன்னர் இறந்துள்ளார். அதிலிருந்து மனஉளச்சலில் இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.