உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் உலக மயக்கவியல் மருத்துவ தினம்

Published On 2022-10-18 06:35 GMT   |   Update On 2022-10-18 06:35 GMT
  • அரசு மருத்துவமனையில் உலக மயக்கவியல் மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.
  • சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

புதுக்கோட்டை:

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக மயக்கவியல் மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமை மருத்துவர் பெரிசாமி தலைமை வகித்தார். மருத்துவர் அருண்குமார் முன்னிலை வகித்தார், மருத்துவர் லிபர்த்தி வரவேற்று பேசினார். இதில் கொரானா காலத்தில் சிறப்பாக பணி புரிந்த மருத்துவ ர்கள், செவிலியர்கள், மருத ்துவமனை ஊழி யர்கள் பாராட்டி சிறப்பிக்கப்பட்டா ர்கள்.

இம்மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்து சிறப்பாக செயல்பட்ட செவிலியர் செல்வகுமாரி, விண்ணரசி, கீதா ஆகியோருக்கு மயக்கவியல் தின சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் தலைமை மருத்துவர் பெரிசாமி பேசும் போது;

மயக்கவிய ல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ந் தேதி கொண்டா டப்படுகிறது. 1846 ஆம் ஆண்டு வலி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்த நாளாகும். இதன்பிறகே அறுவைசிகிச்சை மிகவும் பாதுகாப் பாகவும்,நோய் தீர்க்கும்

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேரில் சுமார் 11 சதவீதம் மக்கள் அனஸ்தீசிய சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்கள். இதில் 30 முதல்49 வயதினரே அதிகம் உள்ளனர். மயக்கவியல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மட்டுமின்றி , தீவிர சிகிச்சையிலும் மகத்தான பணியாற்றிவருகின்றனர்.ஆகவே அவ ர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

இதில் மருத்துவர் மணிவண்ணன், செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி , செவிலியர்கள் வேலுமணி, கலைச்செல்வி, ஜான், திவ்யா, ஆறுமுகம், சிவசங்கரி, சக்கரவர்த்தி, லட்சுமி பிரபா, பூபாலன் மோனாபாய் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர். டாக்டர் லதா நன்றிகூறினார்.

Tags:    

Similar News