உள்ளூர் செய்திகள்

தாசில்தார் அலுவலகம் முன்பு பெண்கள் சாலை மறியல்

Published On 2023-10-18 12:03 IST   |   Update On 2023-10-18 12:13:00 IST
  • கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
  • மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததால் பெண்கள் ஆத்திரம்

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை.இது தொடர்பாக.பயனாளிகளிடம் கேட்டபோது இ சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப்பெறவில்லை என்றும் ,பரிசீலனையில் உள்ளது என்றும் மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள்.மேல் முறையீடு செய்து இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.எனவே தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பாக திடீர் சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் ராமசாமி, காவல்துறை அதிகாரிகள் சாலை மறியல் செய்தவர்களிடம் உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலை மார்க்கத்தில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News