உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடியில் முருகன் கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Published On 2023-01-28 15:02 IST   |   Update On 2023-01-28 15:02:00 IST
  • கறம்பக்குடியில் முருகன் கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
  • தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் முருகன் கோவில், அனுமார் கோவில் மற்றும் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் ஆகியவை உள்ளது. இந்த கோவில்கள் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது என்றும் இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக எனவும் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கோவில்களை அகற்றும் படி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி நெடுஞ்சாலைத் துறையினர் பலமுறை வந்து கோவிலை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொது மக்களின் கடும் எதிர்ப்பால் கோவில் இடிப்பது பலமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் கோவிலை இடித்து அகற்றுவதற்கு முற்பட்டனர். பாதுகாப்பு பணிக்காக ஆலங்குடி துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தகவல் அறிந்த கறம்பக்குடி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் திரளாக கூடி கோவில் இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் நேற்று சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான திருமணங்கள் முருகன் கோவிலில் நடைபெற்றது. திருமணத்துக்கு வருகை தந்த அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு கோவிலை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.


Tags:    

Similar News