உள்ளூர் செய்திகள்
கியாஸ் கசிவால் வீடு எரிந்து நாசம்
- கியாஸ் கசிவால் வீடு எரிந்து நாசமானது.
- பொருட்கள் எரிந்தது
புதுக்கோட்டை:
ஆவுடையார்கோவில் அருகே உள்ள குட்டி புளிஞ்சியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய ஆஸ்பெட்டாஸ் வீட்டில் கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
இதில், மளமளவென தீ பரவியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவுடையார் கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் ரஹ்மான் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்த விபத்தில் ஆஸ்பெட்டாஸ் வீடு மற்றும் வீட்டில் வைத்திருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.