உள்ளூர் செய்திகள்
- பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது
- ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே கல்லாலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள் ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியர் விஜயகுமாரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் கவிதா மற்றும் கருத்தாளர் கோமதி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் அடிப்படை தேவைகள் மற்றும் பள்ளிசெல்லா குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பது பள்ளிக்கு தேவையான கட்டிட வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர், கருத்தாளர் கோமதி, தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.