உள்ளூர் செய்திகள்

சாலை - பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்

Published On 2023-07-18 11:53 IST   |   Update On 2023-07-18 11:53:00 IST
  • ஆலங்குடியில் சாலை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
  • வம்பன் அற்புதா கலைஅறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்களில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

ஆலங்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜான் மார்ட்டின் தலைமை வகித்தார். துணை முதல்வர் பக்சிமெட்டில்டா வரவேற்றார். கருத்தரங்கில் ஆலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் நல்லதம்பி, நகர வட்டார போக்கு வரத்து காவல் ஆய்வாளர் பாஸ்கர் இந்தியன் ரெட் கிராஸ் கிளை சேர்மன் மருத்துவர் முத்தையா, பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர் லட்சுமி நாராயணன், துணைப் பொருளாளர் முருகேசன் செயற்குழு உறுப்பினர் சிவ ஆனந்தன், மார்கரேர் மேரி உட்பட பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினர். இன்னாசிமுத்து நன்றி கூறினார்.

Tags:    

Similar News