கந்தர்வகோட்டை கடைவீதியில் 2 மாதங்களாக எரியாத சாலை விளக்குகள்
- கந்தர்வகோட்டை கடைவீதியில் 2 மாதங்களாக சாலை விளக்குகள் எரியவில்லை
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கடை வீதியில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இரு புறமும் ஒளிரும் சாலை விளக்குகள் புது நகர் அருகே உள்ள சுங்கச்சாவடி பராமரிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக இந்த விளக்குகள் செயல்படாமல் உள்ளது.இதனால் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கும், வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பாக உள்ளது.
சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இந்த விளக்குகளை செயல்பட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவன பராமரிப்பில் உள்ள இந்த சாலை விளக்குகளை ஒளிரச் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.