உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டம்

Published On 2023-07-29 11:41 IST   |   Update On 2023-07-29 11:41:00 IST
  • ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டம் அறந்தாங்கியில் நடைபெற்றது
  • 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதம் ஓய்வூதியம் உயர்த்தி தர கோரிக்கை

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் பேரவை ஆண்டுவிழா கூட்டம் நடைபெற்றது. ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய வட்ட ஆதாரக்கிளைகள் சார்பில் வட்ட ஆதாரக்கிளை தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு அரசிடமிருந்து பெறக்கூடிய மற்றும் வலியுறுத்த வேண்டிய சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் அனைத்து ஓய்வூதியருக்கும் கிடைத்திடவும், அகவிலைப்படி நிலுவை தொகையினை உடன் வழங்கவும், நடுவண் அரசு அறிவிக்கும் அகவிலைப்படியினை மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே தினங்களில் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும், அனைத்துவகை நோய்களுக்கும் சிகிச்சைப் பெற்றிடும் வகையில் மருத்துக்காப்பீடு அமைக்கிட அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.விழாவில் அனைத்து கிளை நிர்வாகிகள், ஓய்வு பெற்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News