உள்ளூர் செய்திகள்

சடையம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை

Published On 2022-07-14 12:06 IST   |   Update On 2022-07-14 12:06:00 IST
  • சடையம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • நெல்மூட்டைகளை விற்க்க முடியாமல் தவிப்பு

புதுக்கோட்டை:

பொன்னமராவதி அருகே சடையம்பட்டியில் நெல்கொள்முதல்நிலையம் திறக்கவேண்டும் என ஊர் பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதை ெதடர்ந்து. மரவாமதுரை ஊராட்சித்தலைவர் அடைக்கன் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இதில் கூறியுள்ளதாவது:-

மறாவமதுரை ஊராட்சி சடையம்பட்டி கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக நெல் கொள்முதல் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இதனால் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பயன்பட்டு வந்தனர். அனால் தற்போது எல்லா பகுதிகளிலும் நெல்கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனால் எங்கள் ஊரில் உள்ள (சடையம்பட்டி) நெல் கொள்முதல் நிலையத்தை செயல் பாட்டுக்கு கொண்டுவரவில்லை. பொன்னமராவதி தாலுகாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து மறவாமதுரை ஊராட்சியில் உள்ள 20க்கும்மேற்பட்டி கிராம மக்கள் ஓலியமங்களம், மேலத்தானியம், எம்.உசிலம்பட்டி, காரையூர், சேரனூர் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்து வைத்துள்ள நெல்மூட்டைகளை விற்க்க முடியாமலும் தனியார் வியபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கும், தள்ளப்பட்டுள்ளன.

எனவே சடையம்பட்டி கிராமத்தில் நெல்கொள்முதல் நிலையம் மீண்டும் திறந்து விவசாயிகளின் வாழ்வில் வளம்பெற ச்செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News