உள்ளூர் செய்திகள்

விராலிமலையில் தி.மு.க சார்பில் கோலப்போட்டி

Published On 2022-12-31 13:57 IST   |   Update On 2022-12-31 13:57:00 IST
  • உதயநிதி பிறந்தநாள் விழா:
  • விராலிமலையில் தி.மு.க சார்பில் கோலப்போட்டி

புதுக்கோட்டை:

தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 35-வது நிகழ்ச்சியாக, மாவட்ட தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் கே.கே செல்லப்பாண்டியன் தலைமையில் விராலிமலை மேற்கு ஒன்றியம், விராலிமலை ஊராட்சி 5-வது வார்டில் விராலிமலையில் தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் ஏற்பாட்டில் கோலப்போட்டி நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வண்ண வண்ண கோலங்கள் வரைந்தனர். நிகழ்வில், ஒன்றிய செயலாளர் இளங்குமரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் எம்.பழனியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செ.குறிஞ்சிவாணன், ஒன்றிய நிர்வாகிகள், ஏ.பி.ஆர்.ராஜாங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி, பிரபாகரன் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


Tags:    

Similar News