உள்ளூர் செய்திகள்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம்

Update: 2022-09-27 06:41 GMT
  • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மணமேல்குடி வட்டாரக்கிளை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வட்டார தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத் துணை தலைவர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் கல்வியை மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் விதமாக பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2 மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை ஒதுக்கீடு செய்து, ஒன்று புதுக்கோட்டை தொடக்கக்கல்வி அலுவலகமாகவும், மற்றொன்று அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகமாவும் செயல்பட அரசாணை வெளியிட்டதற்கு நன்றி,

தொடர்ந்து அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் அறந்தாங்கியிலேயே செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக வட்டார செயலாளர் விஸ்வநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் பல்வேறு பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் பொருளாளர் பாண்டி நன்றியுரை கூறினார்.

Tags:    

Similar News