உள்ளூர் செய்திகள்

நரிக்குறவர் பழங்குடியினத்தவர்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா

Published On 2023-08-06 12:20 IST   |   Update On 2023-08-06 12:20:00 IST
  • புதுக்கோட்டையில் நரிக்குறவர் பழங்குடியினத்தவர்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது
  • அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மக்களுக்கு பட்டா, தையல் இயந்திரம், சாதி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.  அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அறிவொளிநகர் பகுதியினைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் 42 பேருக்கு, விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களையும்,  111 நபர்களுக்கு பழங்குடியின ஜாதிச் சான்றிதழ்களையும அவர் வழங்கினார். மேலும் விழாவில்   5 நபர்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News