உள்ளூர் செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா

Published On 2023-08-14 12:31 IST   |   Update On 2023-08-14 12:31:00 IST
  • அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்றது
  • 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர்

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா பாண்டிபத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆவணி மாதத்தில் பொங்கல் விழா நடைபெறும்.10 நாட்கள் நடைபெறுகின்ற விழாவில் தினந்தோறும் அம்மன் வீதி உலா மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெறும். அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக பூமிதி, காவடி எடுப்பு நடைபெறும். அதே போன்று இந்தாண்டு விழாவை முன்னிட்டு நேற்று பூத்தட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளை தலையில் சுமந்து, கிராமத்தின் முக்கிய வீதி வழியாக சென்று முத்துமாரியம்மன் கோவிலை அடைந்தனர்.அதனை தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பூக்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது.வருகின்ற 18-ந் தேதி லெட்சார்ச்சனையும். அதனை தொடர்ந்து 20 -ந் தேதி காப்புக்கட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்குகிறது.

Tags:    

Similar News