உள்ளூர் செய்திகள்

முத்துமாரியம்மன் கோவிலில் உற்சவ விழா

Published On 2022-10-07 08:08 GMT   |   Update On 2022-10-07 08:08 GMT
  • முத்துமாரியம்மன் கோவிலில் உற்சவ விழா நடந்தது
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் 50ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தினந்தோறும் அம்மன் ராஜராஜேஸ்வரி, மீனாட்சி, சிவலிங்க பூஜை, ஆண்டாள், அன்னபூரணி,. சந்தானலெட்சுமி, கஜலெட்சுமி, மஹிசாசுரமர்த்தினி, சரஸ்வகி என பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு போடும் நிகழ்ச்சி விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது. விழாவில் மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவையொட்டி நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. கொடையாளர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் த.ஜெயலலிதா மற்றும் கோயில் பூஜகர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News