- புதுக்கோட்டையில் நவராத்திரியை முன்னிட்டு வண்ணமயமான கொலு பொம்மைகள் விற்பனை
- கொலு பொம்மைகள் பார்வையிட்டு பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்
புதுக்கோட்டை,
நவராத்திரி தினங்களில் வீட்டில் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம். இந்தாண்டு நவராத்திரி வரும் 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டையில் கொலு பொம்மைகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது.
புதுக்கோட்டை நகரில் சாந்த நாதர் சுவாமி ஆலயம் அருகில், விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை, சரஸ்வதி, லட்சுமி, மாரியம்மன், மதுரை மீனாட்சி, காமாட்சி, கிருஷ்ணர், ராதை கண்ணன், ஆஞ்சநேயர் மற்றும் தலைவர்களுடைய காந்தி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, அப்துல் கலாம் மற்றும் திருமண செட்டு, கோவில் குளங்கள், பாடசாலை உள்ளிட்ட பல்வேறு பொம்மைகள் சிறியது முதல் பெரியது வரை விற்பனைக்கு வந்துள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர் நவராத்திரி விழா வீடுகள் கோவில கோவில்களில் சிறப்பாக நடைபெற இருக்கின்ற நிலையில் கொலு பொம்மைகள் பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர்