உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டை பேருந்து நிலைய தரைதளம் திறப்பு
- ரூ.35 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கந்தர்வகோட்டை பேருந்து நிலைய தரைதளம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது
- சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தின் தரைத்தளம் சேதமடைந்து குண்டும் குழியுமாகவும் காட்சி அளித்தது. இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பயணிகளுக்கும் பேருந்து ஓட்டுநர்கள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்து ரூ.35 லட்சம் செலவில் பேருந்து நிலையத்தின் தரைத்தளம் சீரமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் பேருந்துகள் இயங்குவதற்கு திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர்,துணைத் தலைவர் செந்தாமரை குமார்,திமுக நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், அரசு ஒப்பந்தக்கார ராஜ்குமார்,மதிமுக ஒன்றிய செயலாளர் வைர மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.