உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை அருகே கபடி போட்டி

Published On 2023-02-15 07:21 GMT   |   Update On 2023-02-15 07:21 GMT
  • கந்தர்வகோட்டை அருகே கபடி போட்டி நடைபெற்றது
  • இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

கந்தர்வகோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரவம்பட்டியில் 26 ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி வெற்று முதல் இடத்தை பிடித்த சென்னம்பட்டி அணியினருக்கு ரூபாய் 40 ஆயிரத்தை பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் வழங்கினார். இரண்டாம் இடத்தை முதுகுளம் அணியினரும், மூன்றாம் இடத்தை கோமாபுரம் அணியினரும், நான்காம் இடத்தை அரவம்பட்டி அணியினரும் பிடித்தனர். போட்டியில் விளையாடிய அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் தவமணி, ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி சசிகுமார், துணைத் தலைவர் அருண் பிரசாத், சந்திரன், அரவை மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், கிராம இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Tags:    

Similar News