புதுக்கோட்டை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சன்ன ரக நெல்லை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்
- புதுக்கோட்டை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சன்ன ரக நெல்லை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்
- பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு பேசும்போது, புதுக்கோ ட்டை மாவட்டத்தில் நெல் 97854 ெஹக்டேர் பரப்பளவிலும், சிறுதானி யங்கள் 1985ெஹக்டேர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 4438 ெஹக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 13345 ெஹக்டேர் பரப்பிலும், கரும்பு 2182 ெஹக்டேர் பரப்பளவிலும், பருத்தி 374 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12550 ெஹக்டேர்பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.
மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 51.291 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 35.188 மெ.டன் பயறு விதைகளும், 4.830 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.786 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0.206 மெ.டன் எள் விதைகளும் 0.611 மெ.டன்கள் பசுந்தாள் உர விதைகளும் இருப்பில் உள்ளன.
விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் நெல் சாகுபடியில் சன்ன ரகங்களை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு தழைச்சத்து உரம் தேவையான அளவு கிடைப்பதோடு மணிச்சத்து அதிகளவில் கிடைப்பதனால் பயிர் வளர்ச்சி சீராகவும், பூச்சிநோய் தாக்குதல் குறைவாகவும், அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்பு ள்ளதால், விவசாயிகள் எம்ஏபி உரத்தினை வாங்கி பயன்பெறுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்.
2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1100ெஹக்டேர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 2716 பயனாளிகளுக்கு 2988 ெஹக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.7 கோடியே 24 இலட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ள ப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு பின் உளுந்து சாகுபடி பரப்பினை அதிகப்படுத்திட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.400 மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்பட உள்ளது.கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 72,000 தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பெ.வே.சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், சரக துணைப் பதிவாளர் சதீஸ்குமார் மற்றும் அலுவலர் கள், விவசாயிகள் கலந்துகொண்டனர் .