உள்ளூர் செய்திகள்

புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால் சாதனை படைக்கலாம் - கலெக்டர் அறிவுரை

Published On 2022-07-08 05:54 GMT   |   Update On 2022-07-08 05:54 GMT
  • புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால் சாதனை படைக்கலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
  • லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள நகர்மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வரும் 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 5-வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ள இந்த புத்தகத் திருவிழாவில் 80 அரங்ககளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.

இந்த புத்தகத் திருவிழா குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நேற்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை புத்தக வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 1976 பள்ளிகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட கலை அறிவியல், பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகளிலும், 92 நுலகங்களிலும் நேற்று காலை 11.30 மணியிலிருந்து 12.30 வரை ஒரு மணி நேரம் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் தனக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்தனர்.

புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, பொது அறிவு வளர வேண்டுமானால் மாணவர்கள் பாடத்திட்டத்தைத் தாண்டிய புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். நீங்கள் உங்களுக்குப் பிடித்த எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் வாசிக்கலாம். சிறிய வயதில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக வளராலம். என்றார்.

Tags:    

Similar News