உள்ளூர் செய்திகள்

6 மாதத்திற்குள் வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் உறுதி

Published On 2022-09-26 06:27 GMT   |   Update On 2022-09-26 06:27 GMT
  • 6 மாதத்திற்குள் வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் உறுதி அளித்தனர்
  • சுக்கிரன்குண்டு கிராமமக்கள் போராட்டம் எதிரொலி:

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள சுக்கிரன்குண்டு கிராமத்தில் சுமார் 40 ஆ ண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீட்டும னை பட்டா வழங்க கோரி, தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் மன்மதன் தலைமையில் அப்பகுதி மக்கள் கைகாட்டி பகுதியில் கைக்குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்என்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கிரன்குண்டு கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா இ ல்லாததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், வரு வாய் துறையினருக்கும் மனு கொடுத்தும் இதனால் வரை எந்த பலனும் இல்லை.

இந்நிலையில் பல ஆண்டு காலமாக நாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா கேட்டு போராடிவரும் நிலையில் தற்போது எங்கள் பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைக்க முயல் வதாகவும், அதனால் அதனை தடுத்து நிறுத்தி நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள பட்டா வழங்க கோரியும் அல்லது அதற்கு பதிலாக அடிப்படை வசதிக ளுடன் கூடிய இடத்தையோ, வீட்டையோ தங்களுக்கு வழங்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தை அறிந்து அங்குவந்த வட்டாட்சியர் செந்திலநாயகி தலைமையிலான வருவாய் துறையினர், டிஎஸ்பி தீபக் ரஜினி, வடகாடு காவல் ஆய்வாளர் மற்றும் கீரமங்கலம் வருவாய் அலுவலர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டத்தில் ஆறு மாத காலத்திற்குள் வீட்டு மனை பட்டா வழங்குவதாக வாய்மொழி உத்தரவாக அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News