உள்ளூர் செய்திகள்
திருமயம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
- திருமயம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது
- தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை,
திருமயம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் தலைவர் சிக்கந்தர் தலைமையில் செங்கா விடுதி கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் எம்பி சரவணன், துணைத் தலைவர் சையது ரிஸ்வான், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வீரமணி, ரத்தினம், வீராச்சாமி, முத்துலட்சுமி, காந்திமதி, ஏகம்மை மற்றும் கால்நடை மருத்துவர் மோகனப்பிரியா, வருவாய்த்துறை துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் கிராம நிர்வாக அலுவலர் மீனாள், தலைமை ஆசிரியர், சுய உதவி குழுக்கள், தொலைக்காட்சி நிருபர்கள், பத்திரிக்கை நிருபர்கள், திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.