உள்ளூர் செய்திகள்
- வீட்டில் இருந்த பெண் மாயமானார்
- எம்.காம் படித்து வருகிறார்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் கனிமொழி (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் எம்.காம் படித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்த கனிமொழி மாயமானார். உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், தந்தை செல்வைாஜ் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை யாரும் கடத்தி சென்றனரா...? அல் லது காதலனுடன் சென்றுவிட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தேடி வருகின்றனர்.