உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை பெயிண்டர் விபத்தில் பலி

Published On 2023-08-28 12:12 IST   |   Update On 2023-08-28 12:12:00 IST
  • அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கந்தர்வகோட்டை பெயிண்டர் பலியானார்
  • கந்தர்வகோட்டை போலீசார் உடலை கைப்பற்றி மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுவாமிநாதன் மகன் ரவிச்சந்திரன் (வயது 40). பெயிண்டிங் தொழிலாளி யான இவருக்கு திருமணம் ஆகவில்லை.இந்த நிலையில் கந்தர்வகோட்டை தஞ்சை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகன மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழப்புக்கு காரணமான வாகனத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News