உள்ளூர் செய்திகள்
பொன்னகரத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா
- பொன்னகரத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
- விழாவில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அறந்தாங்கி:
மணமேல்குடி தாலுகா பொன்னகரம் மீனவ கிராமத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தென் திருப்பதி என்றழைக்கப்படும், மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் இராஜகோபுரம் கட்டுவதற்கு அப்பகுதி கிராம மக்கள், ஊர் முக்கியஸ்தர்களால் தீர்மானிக்கப்பட்டது. ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவருமான பரணி கார்த்திகேயன் அடிக்கல்நாட்டி கோபுர கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.விழாவில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் அன்னதானம் நடைபெற்றது.