உள்ளூர் செய்திகள்

முதல் புகைப்பட கேமிரா, திரைப்பட கருவி கண்காட்சி

Published On 2023-08-23 14:22 IST   |   Update On 2023-08-23 14:22:00 IST
  • புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் முதல் புகைப்பட கேமிரா, திரைப்பட கருவி கண்காட்சி நடைபெற்றது
  • பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முதல் சினிமா கருவியை பார்த்து வியந்து அவற்றோடு செல்பி எடுத்துக் கொண்டனர்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, முதல்புகைப்படக்கருவி மற்றும் திரைப்படக்கருவி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்திலிருந்து சினிமா என்கிற நிலைக்கு தொழில்நுட்பமாற்றம்நிகழ்த்திய கருவிகளை சேகரித்து பாதுகாத்து வரும் நா. முகமதுஅப்சர்என்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் காட்சிப்படுத்தியிருந்தார். முதல்சினிமா கருவியோடு உலகத் திரைப்பட தினத்தை முன்னிட்டு சினிமாதொழில் நுட்பம் வளர்ந்த வரலாறுகளை மாணவன் விளக்கிக் கூறினார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முதல் சினிமா கருவியை பார்த்து வியந்து அவற்றோடு செல்பி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளிமுதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாணவனைப் பாராட்டி பரிசு வழங்கினார். துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் பலர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News