உள்ளூர் செய்திகள்

ஆயில் மில் தீப்பிடித்து எரிந்து நாசம்

Published On 2022-12-09 14:39 IST   |   Update On 2022-12-09 14:39:00 IST
  • ஆயில் மில் தீப்பிடித்து எரிந்து நாசமானது
  • பொதுமக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நம்பன்பட்டி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியான பட்டேல் நகரில் ஆயில் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனை பார்த்த நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

இந்நிலையில் இப்பகுதி மக்கள் திடீரென சாலைமறியலில் இறங்கினர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக படி நகரில் சுமார் 500க்கு அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் செயல்படும் இந்த தனியார் ஆயில் நிறுவனத்தால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற் படுவதாகவும் அதனால் அந்த ஆயில் நிறுவனத்தை இந்த பகுதியில் இருந்து அகற்றக்கோரி பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் உடனடியாக அந்த ஆயில் நிறுவனத்தை அந்த பகுதி யில் இருந்து அப்புறப்படுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என்றனர்.

தகவல் அறிந்து வந்த ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம்பவம் தொடர்பாக ஆலங்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News