உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-11 11:44 IST   |   Update On 2023-09-11 11:44:00 IST
  • கந்தர்வகோட்டையில்விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • கொடிக்கம்பம் மற்றும் விளம்பர பதாகைகளை திருடி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்

கந்தர்வகோட்டை 

கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் வெள்ளையன், விடுதலைவளவன் ஆகியோர் தலைமை தாங்கினார். கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் விசிக கொடிக்கம்பம் மற்றும் விளம்பர பதாகைகளை திருடி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வழிபாட்டுத் தலங்களில் விழாவில் பங்கு கொள்ளவும், தொடர்ந்து நிர்வாகிகள் தாக்கப்படுவதை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன்,வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி அசோகன், தொகுதி செயலாளர் மருத பார்வேந்தன், மாநிலத் துணைச் செயலாளர் விடுதலை வேந்தன், கரு காமராஜ், நகரச் செயலாளர் சுர்ஜித் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News