உள்ளூர் செய்திகள்

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் தீப்பந்தம் பிடித்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2023-04-08 13:04 IST   |   Update On 2023-04-08 13:04:00 IST
  • கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் தீப்பந்தம் பிடித்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர்
  • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், நோய் நொடியின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பொன்னமராவதி:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. மறுநாள் அக்கினிப்பால்குட விழா நடைபெற்றது. இதன் பின்னர் கடந்த 26ம் தேதி சுவாமிக்கு காப்புக்கட்டப்பட்டது. அன்று முதல் தினசரி மண்டகப்படி தாரர்கள் சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், நள்ளிரவு சுவாமி வீதி விழா நடைபெறுகிறது. உற்சவ அம்மன் ரதத்தில் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெறும்.

அப்போது தீப்பந்தம் பிடிப்பதால் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு திருமணம் ஆகும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், நோய் நொடியின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாக ரதத்தின் இருபுறமும் தீப்பந்தம் பிடித்து கோவிலை சுற்றி வந்து அம்மனை வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News