இடிந்து விழுந்த அங்கன்வாடி மேற்கூரை
- குடுமியான்மலையில் அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்தது
- இரவு நேரம் என்பதால் குழந்தைகள் தப்பித்தனர்
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குடுமியா ன்மலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகி றது. இங்கு மேல பாறை க்களம், கீழ பாறைகளம், ஓச்சப்பட்டி, குடுமியா ன்மலை உள்ளிட்ட பகுதி களில் இருந்து 25 குழந்தை கள் விளையாட்டுடன் கல்வி கற்று வருகின்றனர். மணிமே கலை என்பவர் பணியா ளராக பணியாற்றி வருகி றார்.இந்த நிலையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக ஆட்சியின் போது மராமத்து பணி நடந்தது.தற்போது பெய்து வரும் பருவ மழையின் காரணமாக கட்டிடத்தின் மேற்புறம் காரை இடிந்து விழுந்தது. . இரவு நேரத்தில் இந்த சம்பவம் நேரிட்டதால் விபத்தில் இருந்து குழந்தை கள் காப்பாற்றப்பட்டுள்ள து. குழந்தை களுக்கான அங்கன்வாடி மையத்தின் கட்டிடத்தை கூட தரமில்லா மல் கட்டித்தந்த ஒப்பந்ததா ரர் யார் என்பதை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமில்லாத கட்டிடம் கட்டினால் நடவடிக்கை பாயும் என்ற அச்சம் ஒவ்வொரு ஒப்பந்தகாரர்கள் மனதில் தோன்ற வேண்டும். அப்போது தான் தரமான கட்டிடங்கள் அமைக்கப்படும் என்பதே பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது