உள்ளூர் செய்திகள்

புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து தொடக்கம்

Published On 2023-08-02 10:56 IST   |   Update On 2023-08-02 10:56:00 IST
  • கறம்பக்குடி புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது
  • ஒன்றிய தலைவர் மாலா ராஜேந்திர துரை தொடங்கி வைத்தார்

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் தீத்தான் விடுதி குழந்திரான் பட்டு மற்றும் ராங்கியன் விடுதி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக, பஸ் வசதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து துறை அமைச்சர் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து கறம்பக்குடி ஒன்றிய தலைவர் மாலா ராஜேந்திர துரை, கறம்பக்குடி பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு தீத் தான் விடுதி குழந்திரான் பட்டு மற்றும் ராங்கியன் விடுதி வழியாக, புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர், பட்டுக்கோட்டை டெப்போ பொது மேலாளர் மற்றும் கிளை மேலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த புதிய வழிதடத்தில் கறம்பக்குடியில் இருந்து காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் பட்டுக்கோட்டைக்கு பஸ் சென்று வரும். இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், முதியோர்கள் ஆகியோர் கறம்பக்குடி மற்றும் பட்டுக்கோட்டைக்கு சென்று வருவதற்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெற்றி வேந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ் ஆவுஸ், தொண்டரணி ரமேஷ் குழந்திரான், பட்டுகலியபெருமாள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இப் புதிய பேருந்தை ஏற்பாடு செய்து கொடுத்த ஒன்றிய தலைவர் மாலா ராஜேந்திர துரைக்கு கிராம பொதுமக்கள் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News