உள்ளூர் செய்திகள்

ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

Published On 2022-12-22 06:19 GMT   |   Update On 2022-12-22 06:19 GMT
  • ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
  • விராலிமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை விராலிமலை ஒன்றிய குழு தலைவர் காமு மணி, அட்மா சேர்மன் இளங்குமரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற தஞ்சாவூர் மீரா சந்தானம் கலைக்குழுவினர் மூலம் கரகாட்டம், எமன் வேடம் அணிந்து நாடகம் மற்றும் நாட்டுபுற பாடல் பாடியும் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதில் ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகள், ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உணவு முறைகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்கள் புரிந்து கொள்ளும் விதமாக எளிதாக விளக்கப்பட்டது. நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பயணிகள் கண்டுகளித்தனர். மேலும் இரத்த சோகையை தடுப்பதற்காக பல்வேறு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் மேரி ஜெய பிரபா, மேற்பார்வையாளர் கோகிலம், ராஜாமணி, பர்வீன் பானு, ரோஸ்லின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News