உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2023-08-24 14:54 IST   |   Update On 2023-08-24 14:54:00 IST
  • திருவப்பூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
  • தற்கொலை காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திருவப்பூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 29). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சதீஷ்க்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார்.

Tags:    

Similar News