உள்ளூர் செய்திகள்
- குட்கா விற்றவர் கைது ெசய்யப்பட்டார்
- போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கேப்பரை முக்கம் பகுதியில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, மாவட்ட எஸ்பியின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வல்லத்திராக்கோட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது ஹனிபா (வயது 55), உடையார் காலணியை சேர்ந்த பாலு ஆகியோர் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து முகமது ஹனிபாவை கைது செய்த போலீசார் ரூ.440 மதிப்பிலான குட்கா பொருட்களையும், ஒரு டூவீலரையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய பாலு தேடி வருகின்றனர்.