கொத்தமங்கலத்தை தலைமையிடமாக ெகாண்டு புதிய யூனியன் உருவாக்க ஓரணியில் திரண்ட அனைத்து அரசியல் கட்சிகள்
- அனைத்துக் கட்சியினரும் இணைந்து கொத்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்று ஊர் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்பட்டது.
- அனைத்து கட்சியின் பிரமுகர்களும் ஓரணியில் நின்று புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கான இடத்தினை அடையாளம் கண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியங்களி ல் ஒன்றாக இருந்து வருகிறதுஇந்த திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்தும் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து சில ஊராட்சிகளை பி ரித்தும் புதிய யூனியன் ஒன்றியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக புதிதாக அமைய இருக்கும் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமாக கொத்தமங்கலம் ஊராட்சியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சரும், ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினருமான சிவ. வீ. மெய்யநாதனிடம் கொத்தமங்கலத்தைச் சார்ந்த அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் மனு அளித்திருந்தனர்.
இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் கொத்தமங்கலத்தில் நடைபெ ற்ற கொத்தமங்கலம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் தொடக்க விழாவின்போது அமைச்சர் மெய்யநாதன் மேடையிலேயே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க போதுமான இடம் கொத்தமங்கலத்தில் இருந்தால் காட்டுங்கள், ஒன்றியம் அமைப்பது தொடர்பாக முடிவு எடுப்போம் என பேசி இருந்தார்.
இதனையடுத்து கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இணைந்து கொத்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்று ஊர் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்பட்டது.இப்போது திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வளர்மதி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மா வட்டச் செயலாளர் செங்கோடன், அதிமுகவின் திருவரங்குளம் தெற் கு ஒன்றியச் செயலாளர் பாண்டியன் பாஜகவின் புதுக்கோரட்டை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பார்த்திபன், மதிமுக ஒன்றிய கவுன்சிலர் விஜயா செல்வராஜ், காங்கிரஸ் மற்றும் நாம்தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சியின் பிரமுகர்களும் ஓரணியில் நின்று புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கான இடத்தினை அடையாளம் கண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.
கொத்தமங்கலம் ஊராட்சியில் கட்சி பாகுபாடு இன்றி எந்த வித கரு த்து வேறுபாடும் இன்றி, ஒற்றுமையுடன் செயல்பட்டு வரும் கொத்த மங்கலம் ஊராட்சி மக்களின் செயல் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிக ளில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.