உள்ளூர் செய்திகள்

சோழீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேக விழா

Published On 2022-11-29 14:45 IST   |   Update On 2022-11-29 14:45:00 IST
  • சோழீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேக விழா நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்

புதுக்கோட்டை:

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி சங்காபிஷேக விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக ருத்ரஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட 108 சங்குகளில் உள்ள புனிதநீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜையை சிவாச்சாரியார் கணேஷ் வழிநடத்தினார். சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.அதுபோல வேந்தன்பட்ட நெய்நந்தீஸ்வரர் கோயில், புதுப்பட்டி நகரத்தார் சிவன் கோயில், வலையபட்டி மலையாண்டிகோயில் உள்ளிட்ட கோயில்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது.

Tags:    

Similar News