உள்ளூர் செய்திகள்

பழம் தரக்கூடிய 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம்

Published On 2023-06-06 05:32 GMT   |   Update On 2023-06-06 05:32 GMT
  • ஆலங்குடி பகுதிகளில் பழம் தரக்கூடிய 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது
  • அமைச்சர் மெய்யநாதன் தகவல்

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வன்னியன் விடுதி, பாத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மரக்கன்றுகளை நட்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பாத்தான் குளம் பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் நடப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டார்.அப்போது ஒவ்வொரு மரக்கன்றுகளும் முறையாக வளர்ச்சி அடைந்துள்ளதா, ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்று அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.இதனை தொடர்ந்து அமைச்சர் கூறும்போது, இந்த ஆண்டு ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மா, பலா, நாவல், கொய்யா போன்ற பழம் தரக்கூடிய 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட உள்ளோம். ஏற்கனவே 14 இடங்களில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அது நல்ல பலனை தந்துள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் நடவு செய்ய உள்ள அனைத்து மரக்கன்றுகளும் பழங்கள் தரக்கூடிய மரக்கன்றுகளாகவே நடப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News