உள்ளூர் செய்திகள்

ஆசிரியையிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2022-08-24 12:52 IST   |   Update On 2022-08-24 12:52:00 IST
  • ஆசிரியையிடம் 3 பவுன் சங்கிலி பறித்து சென்றனர்
  • பணி முடித்து வீட்டிற்கு வரும் வழியில்

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டைச்சேர்ந்தவர் புஸ்பராஜ் (கிராம நிர்வாக அலுவலர்). இவரது மனைவி மேரி (வயது35). கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் தற்போது, புளிச்சங்காடு கைகாட்டியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேரி பணி முடிந்து ஸ்கூட்டரில் புளிச்சங்காடு கைகா ட்டிக்கு சென்றுள்ளார். கறம்பக்காடு பிரிவு சாலை அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள் மேரி அணிந்திருந்த 3 பவுன் சங் கிலியை பறித்துச்சென்றனர். இதுகுறித்து கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News