உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதியில் 36 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2022-11-06 14:16 IST   |   Update On 2022-11-06 14:16:00 IST
  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக தகவல் வந்தது
  • டீக்கடையில் சோதனை செய்து 36 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தன

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக குட்கா உள்ளிட்ட புகையிலை விற்பனை, லாட்டரி விற்பனை கள்ளச் சந்தையில் மது விற்பனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட டீக்கடையில் சோதனை செய்து 36 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News