உள்ளூர் செய்திகள்

மகளிர் சுய உதவி குழுவிற்கு சுழல் நிதியாக 25,000 கோடி

Published On 2023-09-17 14:49 IST   |   Update On 2023-09-17 14:49:00 IST
  • கடந்த 2 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுவிற்கு சுழல் நிதியாக 25,000 கோடி வழங்கப்பட்டுள்ளது
  • அமைச்சர் மெய்யநாதன் தகவல்

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே வடகாட்டில் உள்ள ஆதி திராவிடர் காலனிக்கு திரு வள்ளுவர் நகர் என பெ யரிடப்பட்டு பெயர் பல கையை சுற்றுச்சூழல் அ மைச்சர் மெய்ய நாதன் தி றந்து வைத்தார். இதனை தொடர்ந்து அவர் பேசு கையில்,

பெண்களுக்கு இலவச பஸ் பயணத்திற்கு அனுமதி அளித்து திட்டத்தை நிறைவேற்றி வைத்த நமது முதல்வர் தற்போது மாதந்த றும் ரூ.ஆயிரம் வழங்கி அவர்களின் துயர் துடை த்துள்ளார். தமிழ்நாட்டில் 31,000 பள்ளிகளில் 17 லட்சம் மாணவ மாணவி களுக்கு காலை உணவு வழங்கி மாணவ மாணவி களின் பசியை தீர்த்துள்ளார். அதேபோல் இளைஞர்கள் தொழில் தொடங்க டிக் மூலம் மானியத்துடன் கூடி ய கடன் வழங்கி வருகிறார். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி வழங்கியுள்ளார். இந்த ஆண்டு ரூ. 30 ஆயிரம் கோடி வழங்க இளை ஞர்நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேரடி கண்காணிப்பில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க உள்ளார் . இதுபோல் தமிழக மக்கள் அனைத்து தரப்பி னரும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் இரவு பகலாக சிந்தித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். எ னவே தமிழக மக்கள் அனை த்து துறைகளிலும் மேலும் முன்னேற்றம் அடைய முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

Tags:    

Similar News