உள்ளூர் செய்திகள்

1,700 கி.மீ. தூரத்தை 18 நாட்களில் கடந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்த புறா

Published On 2023-05-14 12:08 IST   |   Update On 2023-05-14 12:08:00 IST
  • 1,700 கி.மீ. தூரத்தை 18 நாட்களில் கடந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்த புறா
  • டெல்லியில் இருந்து அறந்தாங்கி வந்தது

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கி அருகே ரத்தினக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக். இவர் கடந்த 25 ஆண்டுகாலமாக புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த ஆறு வருடமாக பந்தைய புறாக்களையும் வளர்க்க தொடங்கினார். பந்தய புறாக்களை அவ்வப்போது குறிப்பிட்ட தூரம் வரை கொண்டு சென்று விட்டு விட்டு அதனை வீடு தேடி வருவதற்கான பயிற்சிகளையும் அளித்து வந்துள்ளார்.

அவ்வாறு பயிற்சி பெற்ற புறாக்களில் சுரையாதியாப்ஜி என்ற புறா மிகுந்த சுறுசுறுப்புடன் எவ்வளவு தொலைவில் விட்டாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு வந்தடைந்துள்ளது. இதனால் இப்புறாவானது பல இடங்களில் வெற்றிபெற்றும், அதற்கான சான்றிதழ், கோப்பைகளும் பெற்றுள்ளது. இந்நிலையில் டி.ஆர்.பி.எப். என்ற அமைப்பின் சார்பில் டெல்லியில் சான்சியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற புறா பந்தையத்தில் சுரையாதியாப்ஜி புறா போட்டியில் கலந்து கொண்டுள்ளது.

இப்போட்டியில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களிலிருந்து 44 புறாக்கள் கலந்து கொண்டன. இதில் ரத்தினக்கோட்டை பகுதியை சேர்ந்த சுரையா தியாப்ஜி பெயர் கொண்ட பெண் புறா சுமார் 1,700 கிலோ மீட்டரை 18 நாட்களில் கடந்து வந்து தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தில் முதல் இடத்தையும் தென்னிந்திய அளவில் நான்காவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது.

18 நாட்களில் 1,700 மீட்டரை கடந்து தமிழகத்தின் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றதை புறாவின் உரிமையாளர் கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினார். மேலும் உறவினர்கள், நண்பர்கள், புறாவின் உரிமையாளர் முகமது சாதிக்கை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டெல்லியிலிருந்து 1,700 கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து முதலிடம் பிடித்த புறாவால் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News