உள்ளூர் செய்திகள்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து அரிசி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

Published On 2022-07-17 14:40 IST   |   Update On 2022-07-17 14:40:00 IST
  • மத்திய அரசு அரிசி மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை விதிக்க முடிவு செய்துள்ளதை எதிர்த்து ஆலங்குடியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்
  • அத்தியாவசிய உணவுப்பொருளான அரிசியின் மீது மத்திய அரசு விதித்த 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியினை ரத்து செய்யக் கோரி மத்திய அரசினை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை:

மத்திய அரசு அரிசி மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து அரிசி வியாபாரிகள், ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியில் இயங்கி வரும் அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் அரிசி சில்லறை வியாபாரிகள் முழு கடை அடைப்பு மற்றும் அரிசி ஆலைகள் அடைப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

அத்தியாவசிய உணவுப்பொருளான அரிசியின் மீது மத்திய அரசு விதித்த 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியினை ரத்து செய்யக் கோரி மத்திய அரசினை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரிசி ஆலை மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முழு கடை அடைப்பு மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த போராட்டம் காரணமாக பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News