உள்ளூர் செய்திகள்

படுக மொழி அகராதி வெளியீடு

Published On 2022-10-25 15:41 IST   |   Update On 2022-10-25 15:41:00 IST
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அகராதி தயாரிக்கப்பட்டது.
  • ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் மக்கள் பேசும் படுக மொழி சொற்களின் அர்த்தங்களை மும்மொழி அகராதி நெலிகொலு அறக்கட்டளை சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அகராதி தயாரிக்கப்பட்டது. இந்த அகராதியின் வெளியீட்டு விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. நெலிகொலு அறக்கட்டளை தலைவர் ஆர்.தருமன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.சுந்தரதேவன் படுக மொழியை மேம்படுத்துவது குறித்து பேசினார். அகராதியை தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் அறிமுகப்படுத்தினார். அகராதியை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வெளியிட்டு பேசினார். விழாவில், மாநில தலைமை கணக்காளர் ஆர்.அம்பலவாணன், நான்குபெட்டா தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News